Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு

Print PDF
தினகரன்         03.06.2013

தூத்துக்குடி மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறப்பு


தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சியில் பத்து இடங்களில் மலிவு விலை உணவகங்கள் துவக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பத்து இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட் டுள்ளன. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே இதற் கான பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வந்த நிலையில் தற்போது தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயில் பகுதி, ஸ்டேட் பாங்க் காலனி, புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை நுழைவாயில் உள்ளிட்ட பத்து இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதல்வர் ஜெயலலிதா அனைத்து அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை உணவகத்தில் அமைச்சர் செல்லப்பாண்டியன் உணவு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசிஷ்குமார், மேயர் சசி கலாபுஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநகராட்சி கமிஷனர் மதுமதி, துணை மேயர் சேவியர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை, மாநகர அதிமுக செயலாளர் ஏசாதுரை, மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால், தூத்துக்குடி யூனியன் சேர்மன் சண்முகவேல், மாவட்ட வக்கீல் அணி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.