Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்துக்கு பூமி பூஜை

Print PDF
தினமணி       11.06.2013

அம்மா உணவகத்துக்கு பூமி பூஜை


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்துக்குள் அம்மா உணவகம் அமைக்க பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்படுத்தப்படுகிறது. மிகக்குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் ஏழை, எளிய மக்களுக்கும், கூலித் தொழிலாளர் உள்ளிட்டோருக்கும் மிகவும் பயனுள்ளதாக அம்மா உணவகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களிடையே உணவகத்துக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ஏழை, எளியோர் சிகிச்சை பெறும் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.  இதையடுத்து, மருத்துவமனை டீன் டாக்டர் என். மோகன் உணவகம் அமைக்க மாநகராட்சிக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து உணவகம் அமையும் இடத்தை மாநகராட்சி ஆணையர் நந்தகோபால், பொறியாளர் மதுரம் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, அம்மா உணவகம் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் முன் அமைக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜையில், மாநகராட்சி ஆணையர்  நந்தகோபால் மற்றும் மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர்  திருவாய்மொழிப்பெருமாள்,  மாநகராட்சிப் பொறியாளர் மதுரம், மருத்துவமனை  சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி  சித்திரைவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் பேசுகையில் , ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் முதல்வரின் உத்தரவுப்படி விரைவில் அம்மா உணவகம் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும். அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.