Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகங்களில் கூட்டம்: வருவாய் ரூ.10 லட்சம்

Print PDF
தினபூமி       11.06.2013

அம்மா உணவகங்களில் கூட்டம்: வருவாய் ரூ.10 லட்சம்


சென்னை, ஜூன்.11 - அம்மா உணவகங்களில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் வருவாய் ரூ.10 லட்சத்தை எட்டியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட பொது அம்மா உணவகங்கள்  நாள் ஒன்றுக்கு ரூ.30 அல்லது ரூ.40 ஆயிரம் வருவாய் கிடைத்தது. தற்பொது ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வருவாய் உயர்ந்துள்ளது.

கடந்த 3-ந் தேதி அன்றைய ஒரு நாள் வருவாய் 9 லட்சத்து 65 ஆயிரமாகும். இப்பொது ரூ.10 லட்சத்தை தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. அம்மா உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் குறைந்தது 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தினமும் 3 லட்சம் இட்லி விற்பனை ஆகி வந்தது. பொங்கல் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இட்லி விற்பனை 2 1'2 லட்சமாக குறைந்துள்ளது.

தினமும் 35 ஆயிரம் பொங்கல் விற்பனை ஆகிறது. தயிர் சாதம் 20 ஆயிரமும், சாம்பார் சாதம் 40 ஆயிரமும், கறிவெப்பிலை சாதம் 18 ஆயிரமும் விற்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சாதம் வகைகள் மட்டும் ஒரு லட்சம் விற்பனையாகிறது. காலையில் பொங்கல் போட்ட பிறகு அம்மா உணவகங்களில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

உணவகங்கள் உள்ள பகுதி வாழ் மக்கள், கூலி வேலை செய்பவர்கள் காலை டிபனை குறைந்த செலவில் முடித்து கொள்கின்றனர். அம்மா உணவங்களில் உணவு வகைகள் புதிதாக அறிமுகம் செய்யப்படுவதால் விற்பனை அதிகரித்து வருகிறது.

சென்னையில் அம்மா உணவங்களில் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் தொடங்கப்பட உள்ளது. இவை திறக்கப்பட்டால் இதனால் பயன் பெறுவோரின் எண்ணிக்கை பல லட்சமாக உயரும்.