Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அம்மா திட்ட முகாமில் 35 முதியோருக்கு உதவித்தொகை உத்தரவு மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அம்மா திட்ட முகாமில் 35 முதியோருக்கு உதவித்தொகை உத்தரவு மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்


ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 35 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்.

அம்மா திட்ட முகாம்

தமிழக வருவாய்த்துறை சார்பில் ஒவ்வொரு உள்வட்டத்திலும் மக்களைத்தேடி வருவாய்த்துறை என்ற அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கான அம்மா திட்ட முகாம் நேற்று காலை கருங்கல்பாளையம் ரங்கபவனம் திருமணமண்டபத்தில் நடந்தது. முகாமுக்கு ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, கவுன்சிலர்கள் குப்புசாமி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

35 பேருக்கு உதவித்தொகை

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்து கொண்டு 35 முதியோருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கினார்.

முகாம் குறித்து ஈரோடு சமூகபாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் சுப்பராயன் விளக்கி பேசினார். முகாமில் சுமார் 400 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக ஈரோடு வட்ட வழங்கல் தாசில்தார் ஆறுமுகம் வரவேற்று பேசினார். மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அதிகாரிகள் ராமகிருஷ்ணன், சுதாப்பிரியா, நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.