Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில்2-ஆவது கட்ட புகைப்படம் எடுக்கும் பணி

Print PDF

தினமணி                28.06.2013 

இன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில்2-ஆவது கட்ட புகைப்படம் எடுக்கும் பணி

மேட்டுப்பாளையம் நகராட்சியில், தேசிய மக்கள் தொகை தயாரிப்பதற்காக அடையாள அட்டைக்கான புகைப்படம், கைவிரல் ரேகை, விழித்திரை ஆகியவை பதிவு செய்யும் பணி ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

 முதல்கட்ட முகாம்கள் முடிந்துள்ள நிலையில், 2-ஆவது கட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கப்பட உள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து நகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 அதன் விவரம்: ஜூன் 28 முதல் 30 வரை மேட்டுப்பாளையம் நேஷனல் குழந்தைகள் பள்ளியிலும், 28 முதல் ஜூலை 8 வரை நேதாஜி நகராட்சி துவக்கப் பள்ளியிலும், 1 முதல் 8 வரை வ.உ.சி. நகராட்சி துவக்கப் பள்ளியிலும், ஜூலை 9 முதல் 12 வரை நகராட்சி பெண்கள் மேநிலைப் பள்ளி மற்றும் சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியிலும், ஜூலை 13 முதல் 19 வரை காட்டூர் நகராட்சி துவக்கப் பள்ளியிலும், 20 முதல் 26 வரை கேர்வெல் மெட்ரிக் பள்ளியிலும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும்.

 இதில், 5 வயதிற்கு மேல் உள்ள அனைத்து நபர்களின் பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். முகாமிற்கு வரும் ஒவ்வொருவரும் 2010 ஜூன்-ஜூலையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டை கொண்டு வந்து புகைப்படம், கைவிரல் ரேகை, விழித்திரை ஆகியவற்றைப் பதிவு செய்யலாம்.

 வரும்போது ஒப்புகைச் சீட்டு, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட எண் ஆகியவற்றில் தங்களிடம் உள்ள ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.