Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மாணவர்களுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தேவை

Print PDF

தினமணி              10.07.2013

"மாணவர்களுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தேவை

மாணவர்களிடையே மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எம். பழனியம்மாள் தெரிவித்தார்.

அரூரை அடுத்துள்ள செக்காம்பட்டி பி.டி.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா, அதன் தலைவர் இரா.தமிழ்மணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில், சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எம்.பழனியம்மாள் பேசியது:

பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் தற்போது போதிய மழை இல்லை. தமிழக அரசு மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

வீடுகள்தோறும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்தால், வீணாகும் மழை நீரை சேமிக்க முடியும். மழை நீர் சேகரிப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

பிளஸ் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர் நக்கீரனுக்கு ரூ.10 ஆயிரமும், மாணவர்கள் ஹரிபிரசாத், இளமாறன் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

விழாவில் நிர்வாக அலுவலர் கே.கார்த்திக், பள்ளி முதல்வர் ஆர்.பி. ராஜசேகர், துணை முதல்வர் மணிமொழி, இயக்குநர் டி.பொற்கொடி மோகன், ஐ.எம்.எஸ். கல்வி நிறுவன துணைத் தலைவர் ஏ.கே.பி. மூர்த்தி, வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத் தாளாளர் பிரபாகரன், கல்வியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.