Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மருத்­து­வ­ம­னை­களில் 'அம்மா' உண­வகம் விரைவில் துவங்க ஏற்­பா­டுகள் தீவிரம்

Print PDF

தினமலர்              12.07.2013

அரசு மருத்­து­வ­ம­னை­களில் 'அம்மா' உண­வகம் விரைவில் துவங்க ஏற்­பா­டுகள் தீவிரம்

சென்னை:சென்னை அரசு பொது மருத்­து­வ­மனை உட்பட ஆறு அரசு மருத்­து­வ­மனை வளா­கங்­களில் மலிவு விலை உண­வகம் துவங்க மாந­க­ராட்சி சுகாதார துறை­யினர் தீவிரமாக ஏற்பா­டுகள் செய்து வருகின்­றனர்.
விரைவில் துவக்கம்.

சென்­னையில் தற்போது 200 மலிவு விலை உண­வ­கங்கள் செயல்­படுகின்­றன. அவை தவிர, ஆயி­ரக்­கணக்­கான நோயா­ளிகள் வந்து செல்லும் ராஜிவ்­காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னையில் உண­வகம் அமைக்க, கட்­டு­மான பணிகள் நடந்து வருகின்­றன.

இன்னும் ஒரு வாரத்தில் அந்த பணிகள் முடிந்து, முதல்வர் உண­வகத்தை துவக்கி வைப்பார் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அதை தவிர, கீழ்ப்­பாக்கம் அரசு மருத்­து­வ­மனை, ராயப்­பேட்டை அரசு மருத்­து­வ­மனை, ஸ்டான்லி மருத்­துவ கல்லுாரி மருத்­து­வ­மனை, எழும்பூர் மகப்­பேறு மருத்­து­வ­மனை, எழும்பூர் குழந்­தைகள் நல மருத்­து­வ­மனை ஆகிய ஐந்து இடங்­களில் மலிவு விலை உண­வகம் துவங்க மாந­க­ராட்சி சுகா­தார துறை முடிவு செய்­துள்­ளது.
இதற்­காக அந்த ஐந்து மருத்­து­வ­மனை நிர்­வா­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது. ஐந்து மருத்­து­வ­ம­னை­க­ளிலும், மாந­க­ராட்சி சுகா­தார துறை­யினர் ஆய்வு நடத்­தினர்.

அதில், உண­வ­கத்­திற்கு புதிய கட்­டடம் கட்ட இடம் தேர்வு செய்­யப்­பட்டுள்­ளது.

விரைவில் கட்­டு­மான பணிகள் துவங்க அனைத்து ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்டு வரு­கின்­றன என, அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

மறு ஒப்பந்தம்


சென்­னையில் கூடு­த­லாக 200 இடங்­களில் மலிவு விலை உண­வ­கங்கள் திறக்க மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.
இதற்­காக ஒவ்­வொரு வார்­டிலும், காலி­யாக உள்ள மாந­க­ராட்­சிக்கு சொந்­த­மான இடங்­களில் உண­வ­கத்­திற்கு புதிய கட்டடம் கட்ட ஒப்­பந்தம் கோரப்­பட்டு வரு­கி­றது.

கட்­டு­மான பணி­களில் லாபம் இல்லை என்­பதால், அந்த பணி­களை எடுத்து செய்­வதில் பல இடங்­களில் ஒப்­பந்­த­தா­ரர்கள் முன் வர­வில்லை. இதனால் உண­வக கட்­டு­மான பணி­க­ளுக்கு மறு­ஒப்­பந்தம் கோரப்­பட்டு வரு­கி­றது.

இதுகுறித்து அதி­காரி ஒரு­வ­ரிடம் கேட்­ட­போது, 'கட்ட­டங்கள் தயாரான பிறகு தான் கூடுதல் உண­வ­கங்கள் திறக்­கப்­படும். சென்­னையில் ஆயிரம் மலிவு விலை உண­வ­கங்கள் அமைக்க வேண்டும் என்­பது மாந­க­ராட்­சியின் இலக்கு. கூடு­த­லாக 200 உண­வ­கங்கள் விரைவில் அமையும்' என்றார்.

கவுன்­சி­லர்கள் தலை­யீடு

சென்­னையில் இயங்கி வரும் மலிவு விலை உணவகங்­களின் செயல்­பா­டுகள் குறித்து ஒவ்­வொரு பகுதியிலும் உளவு துறை போலீசார் விசா­ரித்து, அறிக்கை தயா­ரித்­துள்­ளனர்.

உண­வ­கங்கள் துவங்­கப்­பட்ட போது இருந்த வரவேற்பு, தற்­போதும் உள்­ளதா என்று அறிய இந்த அறிக்­கையை அரசு கேட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

பெரும்­பா­லான இடங்­களில் உண­வ­கத்­திற்கு வரவேற்பு அதி­க­ரித்து வரு­வ­தா­கவே அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக உளவு துறை அதி­காரி ஒருவர் கூறினார்.

அதே நேரம், சில உண­வ­கங்­களில் உள்ள நிர்­வாக பிரச்­னைகள், கவுன்­சி­லர்கள் தலை­யீடு குறித்தும் அறிக்கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.

இந்த அறிக்கை முதல்­வரின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட இருக்­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.