Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தென்­கொ­ரியா செல்ல அனு­மதி

Print PDF
தினமலர்                  30.07.2013

மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தென்­கொ­ரியா செல்ல அனு­மதி

சென்னை:தென்­கொ­ரி­யாவில் நடை­பெறும், சர்­வ­தேச மாநாட்டில் கலந்து கொள்ள, சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் இரு­வ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி மேயர், கமி­ஷனர், சமீ­பத்தில், அமெ­ரிக்­காவில் உள்ள சான் அந்­தோ­ணியா நக­ருக்கு பயணம் மேற்­கொண்­டனர். அடுத்த கட்­ட­மாக மாந­க­ராட்சி பொறி­யா­ளர்கள், சி.எம்.டி.ஏ., பொறி­யா­ளர்கள் சிங்­கப்பூர், சீனா, ஹாங்காங் நாட்டிற்கு பயணம் மேற்­கொண்­டுள்­ளனர்.

இந்த நிலையில், கொரிய அரசின் அங்­கீ­காரம் பெற்ற ஆராய்ச்சி நிறு­வ­ன­மான, 'தி கொரியா டிரான்ஸ்போர்ட் இன்ஸ்­டி­டியூட்' ஏழு நாட்­க­ளுக்கு, சர்­வ­தேச மாநாட்டை, அந்த நாட்டின் தலை­நகர் சியோலில் நடத்­து­கி­றது. வரும் அக்., 13ம் தேதி முதல், 19ம் தேதி வரை இந்த மாநாடு நடக்­கி­றது. இந்த மாநாட்டில், சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் இருவர் கலந்து கொள்ள மாந­க­ராட்சி அனு­மதி வழங்கி உள்­ளது.

அதன்­படி, தலைமை பொறி­யாளர் லெஸ்லி ஜோசப் சுரேஷ்­குமார், பேருந்து சாலைகள் துறையின் மேற்­பார்வை பொறி­யாளர் புக­ழேந்தி ஆகியோர், சியோல் செல்ல, உள்­ளனர்.

இதுகுறித்து, மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறு­கையில், 'சென்னை மாந­க­ராட்­சியில் உலக தரத்தில் சாலை அமைக்கும் திட்டம் உள்­ளது. கொரி­யாவில் நடை­பெறும் மாநாடு சாலை சம்­பந்­த­மா­னது. இதனால், சென்னை மாந­கராட்‌சி பொறி­யா­ளர்கள் இதில் கலந்து கொள்­வது அவசி­ய­மா­னது.

இதற்­கான செலவு முழு­வதும் மத்­திய நகர்ப்­புற வளர்ச்சி துறை அமைச்­சகம் ஏற்கும்,' என்றார்.