Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்பாக்கம் நகராட்சியில் இலவச சித்த மருத்துவமனை தொடக்கம்

Print PDF

தினமணி              05.08.2013

செம்பாக்கம் நகராட்சியில் இலவச சித்த மருத்துவமனை தொடக்கம்

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இலவச சித்த மருத்துவமனை தொடக்கப்பட்டுள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயக்குநர் கே.மாணிக்கவாசகம் இலவச சித்த மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசியது:

தாம்பரம் சானடோரியத்தில் செயல்பட்டுவரும் தேசிய சித்த மருத்துவமனைக்கு வார நாள்களில் சராசரியாக 1500 நோயாளிகளும், ஞாயிற்றுக்கிழமை 2 ஆயிரம் நோயாளிகளும் வருகின்றனர்.

சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அனைத்து வசதிகளும் உண்டு. அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவையும் அளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அருகில் உள்ள செம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இலவச சித்த மருத்துவ முகாம்கள் மூலம் எங்களது சேவையை விரிவுபடுத்தி உள்ளோம். வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த உரிய அனுமதி பெற வேண்டும்.

செம்பாக்கம் நகராட்சியுடன் இணைந்து தொடங்கப்பட்டு இருக்கும் இலவச சித்த மருத்துவமனையில் சனிக்கிழமைதோறும் காலை 10.30 முதல் 12.30 வரை இலவச சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். இப்பகுதி மக்கள் இலவச சிகிச்சை பெற இடவசதி அளித்துள்ள செம்பாக்கம் நகராட்சி நிர்வாகம் பாராட்டுக்குரியது என்றார்.

செம்பாக்கம் நகர்மன்றத் தலைவர் எம்.சாந்தகுமார், ஆணையர் சிவசுப்ரமணியன், நகரமன்ற உறுப்பினர் கோ.சத்யநாராயணன், தேசிய சித்த மருத்துவ நிறுவனப் பேராசிரியர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.