Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.50 கட்டணத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனை கமிஷனர் லதா தகவல்

Print PDF

தினத்தந்தி              03.09.2013

கோவை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.50 கட்டணத்தில் ‘ஸ்கேன்’ பரிசோதனை கமிஷனர் லதா தகவல்

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/pregnant.jpg

 

 

 

 

கோவையில் 9 மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.50 கட்டணத்தில் ‘ஸ்கேன்’ வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

கமிஷனர் ஆய்வு

கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில், மாநகராட்சி கமிஷனர் லதா தலைமையில் நேற்று மருத்துவ வசதி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கமிஷனர் லதா பேசும்போது கூறியதாவது:–

மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளை சேர்ந்த பொது மக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது மாநகராட்சி மருத்துவர்களின் முக்கிய பணியாகும். ஏழை பெண்களை அவர்களது கர்ப்பகாலத்தில் அலைய விடாமல் ஆரம்பம் முதல் கர்ப்பிணி பெண்கள் விவரங்களை பதிவு செய்து அவர்களுக்கான பரிசோதனைகள் மற்றும் உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்க வேண்டும.

பிரசவ வசதி

ஏழை கர்ப்பிணி பெண்கள் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து கொள்வதற்கு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் ஓவ்வொரு நாளும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் ஏழை மக்களிடத்தில் அன்பாக பேசி சிகிச்சை அளிக்க வேண்டும். ஓவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்கும் நேரம் அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் இருக்க வேண்டும். குடிசை பகுதிகளில் நடத்தப்டும் மருத்துவ முகாம்கள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் அங்குள்ளவர்களுக்கு மிகவும் பயனள்ள வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ரூ.50 கட்டணத்தில் ஸ்கேன்

மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை கர்ப்பிணி பெண்களின் வசதிக்காக 9 மருத்துவமனைகளில் ஸ்கேன் வசதி உள்ளது. இந்த மருத்துவமனைகளில் ஓவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் 50 ரூபாய் கட்டணத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை பார்க்கப்படும். சீதாலட்சுமி மருத்துவமனை, கணபதி, பீளமேடு, செல்வபுரம், உப்பிலிபாளையம் மற்றும் சிங்காநல்லூரில் உள்ள மருத்துவமனைகள் உள்பட 9 மாநகராட்சி மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த 9 மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 1737 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழை மக்களின் வசதிக்காக 6 மருத்துவமனைகளில் தொற்றா நோய் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 30 வயதிற்கு மேற்பட்ட 5,702 பேருக்கு மேற்காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,780 பெண்களுக்கு மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 43 நபர்களுக்கு மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. 89 பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் பிரசவம் பார்த்து கொள்ள தங்களது வீடுகளிலிருந்து மாநகராட்சி மருத்துவ மனைகளுக்கு செல்வதற்கு தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதியை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் சு.சிவராசு, நகர்நல அலுவலர் டாக்டர் பி. அருணா மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.