Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

என்எஸ்எஸ் சிறப்பு முகாமில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

Print PDF

தினகரன்             01.10.2013

என்எஸ்எஸ் சிறப்பு முகாமில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

திருச்சி, : மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ் முகாமில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவிகள் திட்ட அலுவலர்கள் கலையரசி, கீதா, ரஞ்சனி, புவனேஸ்வரி, இலக்கியா ஆகியோர் தலைமையில் உளுந்தங் குடி, பாளையநல்லூர், அத்தாணி, நெற்குப்பை, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் 5 யூனிட் மாணவிகள் 250 பேர், 7 நாட்கள் தங்கி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, பெண் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம், தூய்மை பணி, மரக்கன்று நடுதல், பள்ளிச்செல்லா, வேலையில்லாத, எழுத்தறிவு பெறாதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு, கண்தான விழிப்புணர்வு, குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு பணி களை செய்தனர். இந்த முகாமின் துவக்கவிழா கடந்த 24ம் தேதி நடைபெற்றது. பல்கலைக்கழக என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், மண்ணச்சநல்லூர் பேரூ ராட்சி தலை வர் கீதா ஸ்ரீதர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிறைவு விழா இன்று (30ம் தேதி) கல்லூரி வாளகத்தில் நடைபெறுகிறது. விழாவில் கல்லூரி முதல் வர் கி.சேகர், கல்லூரி நிர் வாக அறங்காவலர் அரு. லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்பண்பாட்டுத்துறை தலை வர் பேராசிரியர் கனகசபை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, சிறப்பான பணியை மேற்கொண்ட மாணவிகளுக்கு பரிசு களை வழங்குகிறார். திட்ட ஒருங்கிணைப் பாளர் இலக்கிய வரவேற்று பேசு கிறார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி நன்றி கூறுகிறார்.