Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 68 மனுக்கள் பெறப்பட்டன

Print PDF

தினகரன்         23.10.2013

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்: 68 மனுக்கள் பெறப்பட்டன

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 68 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாநகராட்சியில் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட் டம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்களுக்கு இடை யூறாக உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றவும், சாலை மேம்பாடு செய்யவும், பழுதடைந்த தெருவிளக்கு களை சீரமைக்கவும், கழிவறைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிக்க கோரியும் மனுக் கள் பெறப்பட்டன.

இதில் கோ.அபிஷேக புர கோட்டத்திற்கு உட் பட்ட 38, 39, 40, 41, 45 ஆகிய 5 வார்டுகளில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசின் ஆரம்ப சுகாதார மையம், மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண் டும். பொது குடிநீர் குழாய் இல்லாத பகுதிகளுக்கு வாரம் 3 முறையாவது லாரி கள் மூலம் குடிநீர் விநியோ கம் செய்யவேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அபிஷேகபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேலுச்சாமி தலைமையில் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்ற மேயர் ஜெயா கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மாநகர பகுதியில் டெங்கு அறிகுறிகள் தெரியவந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக், நகர் நல அலுவலர் டாக்டர் அல்லி, செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஸ், உதவிஆணையர்கள் பாஸ் கர், பிரபுகுமார் ஜோசப், ரங்கராஜன், தயாநிதி கலந்து கொண்டனர்.