Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஊழியர்களுக்கு நகர ஈட்டுப்படி விரைவில் பெற ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்த திட்டம்

Print PDF

தினகரன்         22.10.2013

மாநகராட்சி ஊழியர்களுக்கு நகர ஈட்டுப்படி விரைவில் பெற ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்த திட்டம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்திற்கு கவுரவத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைவர் விஜயகுமார், பொதுசெயலாளர் ராதாகிருஷ்ணன் முன் னிலை வகித்தனர். துணைத்தலைவர் கோபிநாத் வரவேற்றார். துணைத்தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 1-7-2013 முதல் 10 சதவீத அகவிலைப்படி அறி வித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் கூட்டமைப்பு சார்பில் வரும் நவம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாட்டில் ஈரோடு மாநகராட்சி கூட்டமைப்பு சார்பில் அதிகளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு மாநகராட்சி பொது விதிகள் 1996ன்படி ஒவ்வொரு மாநகராட்சியில் தனித்தனி அலகாக மாற்றம் செய்யவும், அந்தந்த துறையில் இருந்தே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் நகராட்சி, மாநகராட்சிகளில் இருந்தும் மற்றும் பிற துறைகளில் இருந்தும் மாநகராட்சியில் பணி நியமனம் செய்வதை முழுமையாக கைவிட வேண்டும்.
 வேறு துறை பணியாளர்களை மாநகராட்சியில் பணி நியமனம் செய்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகி உடனடியாக கூட்டமைப்பு சார்பில் தடை ஆணை பெற முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சிகளை நிர்வாகம் செய்ய தனி அமைப்பாக ‘‘மாநகராட்சி நிர்வாக ஆணையரகம்‘‘ ஏற்படுத்தவும் அரசை வலியுறுத்தப்பட்டது.

மேலும் 1996ம் ஆண்டு மாநகராட்சி பணி விதிகளில் உரிய திருத்தம் செய்து மாநகராட்சியில் பதவி உயர்வுக்கு 2 ஆண்டு கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பதை அரசு கைவிட வேண்டும்.

 சென்னை, கோவை,  திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் மாநகராட்சிகளில் பணிபுரியும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு நகர ஈட்டுப்படி (சிசிஏ) வழங்குவதை போல ஈரோடு மாநகராட்சியிலும், மாநகராட்சி உருவான தினமான 1-1-2008 முதல் முன் தேதியிட்டு வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

நகர ஈட்டுப்படியை விரைந்து பெறும் வகையில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களை கலந்து பேசி ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்தி சென்னையில் அரசு நிதித்துறை செய லாளரை சந்தித்து கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டது.

மாநகராட்சியிலுள்ள 4 மண்டலங்களிலும் தனித்தனியே 4 துப்புரவு அலுவலர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சி வாகனங்களை பராமரிப்பதற்காக மெக்கானிக்கல் பிரிவு ஏற்படுத்தவும், நகராட்சிகளில் உள்ளதை போல ஈரோடு மாநகராட்சி நகரமைப்பு பிரிவை தனிப்பிரிவாக அமைக்க வேண்டும்; ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு மாநகராட்சிக்கு தூயகுடிநீர் கொண்டு வரும் திட்டப்பணி களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.