Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி - கன்டோன்மென்ட் எல்லை கட்டமைப்பு : ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள கோரிக்கை

Print PDF

தினமலர்          06.11.2013

மாநகராட்சி - கன்டோன்மென்ட் எல்லை கட்டமைப்பு : ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள கோரிக்கை

ஆலந்தூர் : மாநகராட்சி - கன்டோன்மென்ட் எல்லைப் பகுதியில் உள்ள கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் அதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

எது கன்டோன்மென்ட்? பரங்கிமலை, கன்டோன்மென்ட் கழகம் பகுதி, 2800க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்டது. 7 வார்டுகள் கொண்ட அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் வசிக்கின்றனர்.

கன்டோன்மென்ட் பகுதியை சுற்றி, சென்னை மாநகராட்சி பகுதியான ஆலந்துார், பரங்கிமலை, பட்ரோடு, நந்தம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பல்லாவரம் பகுதிகள் உள்ளன. இதில், ஜி.எஸ்.டி., சாலையில், கத்திப்பாரா மேம்பாலம் முதல் பல்லாவரம் வரை, மற்றும் பரங்கி மலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2 கி.மீ., துாரம் வரை, கன்டோன் மென்ட் கைவசம் உள்ளது.குழப்பம் அங்கு, சாலை மேம்பாட்டு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறை செய்கிறது. மேலும், கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள குற்றம், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மாநில காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் கன்டோன்மென்ட் எல்லைப் பகுதியில் சாலை, கழிவுநீர், குடிநீர், மின்விளக்குகள் ஆகியவற்றை எந்த துறை அமைக்க வேண்டும் என்ற சிக்கல் நிலவுகிறது. இந்த குழப்பத்தால், சாலை பழுது, போக்குவரத்து பாதிப்பு, கழிவுநீர் அடைப்பு, சாலையில் மழைநீர் தேக்கம், சுகாதாரம் பாதிப்பு என, தீர்க்க முடியாத பிரச்னை களை, பகுதிவாசிகள் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து எல்லைப் பகுதியில் உள்ள கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கூட்டம் நடக்குமா? இதுகுறித்து, பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, கன்டோன்மென்ட், நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், சட்டம் -ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆகிய சேவைத் துறை அதிகாரிகள் மாதம் ஒருமுறை, தங்கள் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான், எல்லைப் பகுதியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,இவ்வாறு அவர்கள் கூறினர்.