Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வ.உ.சி உயிரியல் பூங்காவில் பறவை, விலங்கு எண்ணிக்கை உயர்வு

Print PDF

தினகரன்          09.11.2013

வ.உ.சி உயிரியல் பூங்காவில் பறவை, விலங்கு எண்ணிக்கை உயர்வு

கோவை, : கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் பறவை, விலங்குகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது.

கோவை நகரசபையாக இருந்த போது கடந்த 1965ம் ஆண்டில் 1.5 ஏக்கரில் உயிரியல் பூங்கா துவக்கப்பட்டது. நரி, மான், குரங்கு, வாத்து என 25 உயிரினங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உயிரியல் பூங்கா 4.61 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 2006-07ம் ஆண்டில் இதில் 68 பாலூட்டிகள், 306 பறவைகள், 26 ஊர்வனங்கள் என 400 உயிரினங்கள் இருந்தன. கடந்த 2007-08ம் ஆண்டில் 72 பாலூட்டிகள், 307 பறவைகள், 26 ஊர்வனங்கள் என 405 உயிரினங்கள் வசித்தன.

கடந்த 2008-09ம் ஆண்டில் 74 பாலூட்டிகள், 309 பறவைகள், 26 ஊர்வன என மொத்தம் 409 உயிரினங்கள் இருந்தன. கடந்த 2009-10ம் ஆண்டில் 75 பாலூட்டிகள், 312 பறவைகள், 26 ஊர்வனங்கள் என மொத்தம் 413 உயிரினங்கள் இருந்தன. கடந்த 2010-11ம் ஆண்டில் 91 பாலூட்டிகள், 331 பறவைகள், 23 ஊர்வனங்கள் என 455 உயிரினங்களும்,  கடந்த 2011-2012ம் ஆண்டில் 541 உயிரினங்களும் வசித்தன. நடப்பா ண்டில் (அக்டோபர் வரை) பூங்காவில் உள்ள உயிரினங்கள் எண்ணிக்கை 865 ஆக அதிகரித்துள்ளது.

முதலை, பாம்பு, மான், வாத்து இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட ஈமு கோழிகள், ஜமுனா பாரி ஆடுகள், குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பாம்புகளால் பூங்காவில் உயிரினங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 17 ஆண்டிற்கு பிறகு முதலைகள் 14 முட்டைகள் இட்டு குஞ்சு பொரித்தன. 5 ஆண்டிற்கு பிறகு நரியும் குட்டி போட்டது. உயிரியல் பூங்காவில் பறவை, விலங்குகளின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக வாத்து, கோழி, மயில், எலி, முயல்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பூங்கா நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பறவைகள் எண்ணி க்கை அதிகரிப்பு 2 முதல் 3 சதவீதமாகத்தான் இருக்கிறது. பார்வையாளர்கள் இடையூறு, மின் விளக்கு வெளிச்சம் காரணமாகவே பறவை, விலங்குகளின் இனப்பெருக்கம் குறைவாக இருந்தது. இரவில், பூங்கவில் மின் விளக்கு அதி களவு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பறவை, விலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்து, பூங்காவில் உயிரினங்களின் எண்ணி க்கை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.