Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Print PDF

தினகரன்            22.11.2013

சுகாதார விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி, : உலக கழிவறை தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சி சார்பில் கடந்த 19ம் தேதி முதல் திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிக்காமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று கோ.அபிஷேகபுரம் கோட்டம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொன்னகரில் நடந்த நிகழ்ச்சியில் பேரணியை மேயர் ஜெயா துவக்கி வைத்தார். ஆணை யர் தண்ட பாணி, கோட்ட தலைவர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா காந்தி, ராஜாஜி வித்யாலயா, ஜான் வெஸ்ட்ரி, தனலெட்சுமி சீனிவாசன், ஆரோக்கியமாதா, கி.அ.பெ.விஸ்வநாதம், காவேரி மெட்ரிக்.  ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள் ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

பேரணி அரிஸ்டோ ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் வழியாக சென்று வெஸ்ட்ரி பள்ளியை அடை ந்தது. பேரணியில் சுகாதார விழிப்புணர்வு குறித்த கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னர் வெஸ்ட்ரி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அனைவரும் சுகாதாரமான கழிப்பறையை பயன்படுத்துவோம், கழிப்பறைக்கு செல்லும் போது காலணியை உபயோகிப்போம், கழிப்பறையை பயன்படுத்திய பின்பு கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய் வோம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.