Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டிச.10இல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி             07.12.2013

டிச.10இல் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆதார் அட்டைக்கான இரண்டாம்கட்ட புகைப்படம் எடுக்கும் பணி டிச.10ஆம் தேதி துவங்க உள்ளதாக சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் தெரிவித்தார்.

 வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது: 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,025 பேர் சிவகங்கை நகராட்சிப் பகுதிகளில் உள்ளனர். இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்காக முதல் சுற்றில் 23,058 பேர் புகைப்படம் எடுத்துள்ளனர். டிச.10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ள இரண்டாம் கடட புகைப்படம் 16,491 பேருக்கு எடுக்கப்பட உள்ளது.

 நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்கள் மூலம் விடுபட்டவர்கள் கணக்கெடுப்பு வீடுதோறும் நடத்தி அவற்றைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்படும். இதன்பின்னர் விடுபட்டவர்கள் பற்றிய விவரங்கள் கணினியில் தொகுக்கப்படும். இவர்கள் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்க வரும்போது ஒப்புகைச் சீட்டு இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றின் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் நகலுடன் புகைப்படம் மையங்களுக்குச் சென்று படம் எடுத்துக் கொள்ளலாம்.

 சிவகங்கை வார்டு எண் 1 முதல் 5 வரை டிச.10, 11ஆம் தேதி, வார்டு எண் 6 மற்றும் 7ல் டிச.11 மற்றும் 12ஆம் தேதி, வார்டு எண் 8 முதல் 11 வரையிலானவர்களுக்கு டிச.12 மற்றும் 13ஆம் தேதிகளிலும், வார்டு எண் 12 மற்றும் 13ல் உள்ளவர்களுக்கு 13 மற்றும் 14ஆம் தேதிகளிலும், வார்டு எண் 14 முதல் 18 வரையிலானவர்களுக்கு டிச.14 மற்றும் 15ஆம் தேதிகளிலும், வார்டு எண் 19 மற்றும் 20ல் உள்ளவர்களுக்கு டிச.15 மற்றும் 16ஆம் தேதியும், வார்டு எண் 21 முதல் 25 வரையிலானவர்களுக்கு டிச.16 மற்றும் 17ஆம் தேதிகளிலும், வார்டு எண் 26 மற்றும் 27ல் உள்ளவர்களுக்கு டிச.17 மற்றும் 18ஆம் தேதிகளிலும் புகைப்படம் எடுக்கப்படும்.

 பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜபாண்டி (செல் 9600992860), அல்லது மேற்பார்வையாளர் சரவணன் (செல் 9715326370) ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என நகர்மன்றத் தலைவர் அர்ச்சுணன் தெரிவித்தார்.