Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டலில் 10ம் தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினகரன்              10.12.2013

திண்டலில் 10ம் தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேசிய மக்கள்தொகைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் 10ம்தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்குகிறது. திண்டல் 1 முதல் 6வது பிளாக் வரை உள்ள காரப்பாறை, புதுக்காலனி, அக்னிநகர், பங்காருநகர், வித்யாநகர், ஐத்தரியா அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு காரப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10ம்தேதி முதல் 15ம்தேதி வரையும், 7 முதல் 12வது பிளாக் வரை உள்ள மேல் திண்டல், கீழ் திண்டல், அருள்நகர், முருகன்நகர், கணபதிநகர், டி.ஆர்.கார்டன், சக்திநகர், கலைமகள் நகர் ஆகிய பகுதிகளுக்கு 16ம்தேதி முதல் 20ம்தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது.

 13 முதல் 18வது பிளாக் வரை உள்ள கே.ஏ.எஸ்.நகர், சத்தியசாய்நகர், பால்காரர் தோட்டம், ராஜீவ்நகர், ராஜா கார்டன், செங்கோடம்பாளையம், அம்மன்நகர், வள்ளியம்மை நகர் ஆகிய பகுதிகளுக்கு 21ம்தேதி முதல் 25ம்தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது. 19 முதல் 25வது பிளாக் வரை உள்ள செல்வம்நகர், ஸ்ரீநகர், சாமுண்டிநகர், அரவிந்த்நகர், பெரியார் காலனி, காலாஜி கார்டன், மாணிக்கம்பாளையம், நல்லியம்பாளையம், லட்சுமிநகர், லட்சுமி கார்டன், சரவணாநகர், எஸ்.டி.எஸ்.கார்டன், தெற்குபாளையம் ஆகிய பகுதிகளுக்கு 26ம்தேதி முதல் 31ம் தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது.

 புகைப்படம் எடுக்கும் பணி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2010ம்ஆண்டு மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் அதற்கான பதிவுசீட்டுடன் வந்து உரிய மையத்தில் தேசிய மக்கள்தொகைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.