Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வீதி நாடகம்

Print PDF

தினகரன்           12.12.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு வீதி நாடகம்

திருச்சி, : திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் முன்பு மேயர் ஜெயா தலைமையில் சுகாதார அலுவலர் மாரியப்பன் முன்னிலையில் நேற்று பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகத்தினை பரதாலய குழு இயக்குனர் சத்தியன் குழுவினர் நேற்று நடத்தினர்.

நாடகத்தில், டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கான விபரங்களை பொதுமக்களுக்கு நடித்து காட்டினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள், கொட்டாங்குறிச்சி, டயர், உடைந்த மண்பானை, உரல், ஆட்டுக்கல் போன்றவற்றில் நீர் தேங்காமல் இருப்பதற்கும், தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கழிவறை பயன்படுத்திய பின் சுத்தமாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தடுக்கவும், தேவையற்ற பொருட்களை உடன் அப்புறப்படுத்த கோரியும் மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் நடித்து காட்டினார்கள். மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மருத்துவ மனைகளில் சென்று பரிசோதித்து கொள்ளுமாறும் நாடகத்தில் அறிவுறுத்தப்பட்டது.