Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சியில் மீண்டும் தொடக்கம்

Print PDF

தினமணி            19.01.2014

ஈரோடு மாநகராட்சியில் மீண்டும் தொடக்கம்

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி ஈரோடு மாநகராட்சியில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உயிரியல் புள்ளியியல் (பயோ மெட்ரிக்) கார்டு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 2-ம் கட்டமாக மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் இருந்தும் புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த முகாமில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பழைய நகராட்சி வார்டு எண்கள் 24 முதல் 35 வரை புகைப்படம் எடுக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சனிக்கிழமை முதல் ஜன.23ம் தேதி வரை பழைய 24வது வார்டு மக்களுக்கு ஈரோடு இடையன்காட்டு வலசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 25, 26, 27 ஆகிய வார்டு மக்களுக்கு ஈரோடு முத்துகருப்பண்ணவீதி கலைமகள் கல்வி நிலைய தொடக்கப்  பள்ளியிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது. மேலும் 28, 29, 30 ஆகிய வார்டு மக்களுக்கு ஈரோடு காந்திஜி சாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

31, 33-வது வார்டுகளுக்கு ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், 34, 35 ஆகிய வார்டுகளுக்கு காளைமாடு சிலை அருகில் உள்ள பாலசுப்பராயலு வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும்

புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.    இந்த மையங்களில் மக்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து வருகின்றனர்.