Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமாரபாளையத்தில் 22 போலியோ சொட்டு மருந்து மையங்கள்

Print PDF

தினமணி            19.01.2014

குமாரபாளையத்தில் 22 போலியோ சொட்டு மருந்து மையங்கள்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்பட 22 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குமாரபாளையம் ரோட்டரி சங்கம், எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்களின் ரோட்ராக்ட் சங்கத்தினர், நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து பேரணியை நடத்தினர். ராஜம் திரையரங்கு அருகே தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்த இந்தப் பேரணியை நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தொடக்கி வைத்தார்.

எஸ்எஸ்எம் கல்வி நிறுவனத் தலைவர் எம்.எஸ்.மதிவாணன், ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.அசோகன், செயலர் பிரகாசன், பொருளாளர் கதிர்வேல், நகராட்சி ஆணையர் என்.சங்கரன், பொறியாளர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ நோய் தடுப்பு மருத்து வழங்குவது குறித்து பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.