Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Print PDF

தினமணி             13.01.2014

துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

பொங்கல் விழாவை முன்னிட்டு கும்பகோணம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சேலை மற்றும் கைலியை நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர் தனது சொந்த செலவில் திங்கள்கிழமை வழங்கினார்.

இதேபோல் நகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர் எஸ். கலைச்செல்வன், நகர்மன்றத் துணைத் தலைவர் ராஜாநடராஜன், நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொங்கல் பொருள்கள்....

கும்பகோணம் 37-வது வார்டு பொதுமக்களுக்கு, அந்த வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சார்பில் திங்கள்கிழமை பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் 37-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், நகர அதிமுக துணைச்செயலாளருமான கே. ராஜூ தன்னுடைய சொந்த நிதியிலிருந்து  ஆண்டுதோறும் அந்த வார்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக பொங்கல் பொருள்கள் வழங்கி வருகிறார். அதன்படி கும்பகோணத்தில் 10-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவுக்கு நகர்மன்ற உறுப்பினர் கே. ராஜூ தலைமை வகித்தார்.

நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் பொங்கல் பொருள்களை வழங்கினார்.

இதில், 603 பேருக்கு 2 கிலோ அரிசி, 1 கிலோ வெல்லம், 2 கரும்புகள் ஆகியவை வழங்கப்பட்டன.

இதில், முன்னாள் நகர அதிமுக செயலாளர்கள் பி.எஸ். சேகர், ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரசு ஏ. ஜெயசீலன் செய்திருந்தார்.