Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகுண்ட ஏகாதசி விழாவில் பிளாஸ்டிக் பயன்படுத்தாதோருக்கு தங்கம், வெள்ளி பரிசுகள் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

Print PDF

தினகரன்            10.01.2014

வைகுண்ட ஏகாதசி விழாவில் பிளாஸ்டிக் பயன்படுத்தாதோருக்கு தங்கம், வெள்ளி பரிசுகள் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சி, : ஸ்ரீரங்கத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோல பயன் படுத்தாதவர்களுக்கு தங்க, வெள்ளி காசுகள் பரிசு வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி விழவையொட்டி லட்சக்கணக்கில் கூடும் பக்தர்களின் வசதிக்காக திருச்சி மாநகராட்சி மூலம் சுகாதாரம், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்வதுடன் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது. இவற்றுடன் மாநகரை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பராமரித்திட, அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் மற்றும் பிளாஸ் டிக் பொருட்களை ஸ்ரீரங்கம் பகுதியில் முற்றிலுமாக தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையொட்டி ஸ்ரீரங்கத்திற்குள் நுழையும் ஐந்து நுழைவாயில் பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஸ்ரீரங்கத்துக்குள் வருவோர் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட் களை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக, துணி பைகள் வழங்கப்படும். வாகனங்களில் ஸ்ரீரங்கம் நகருக் குள் வருபவர்களுக்கு முத லில் துண்டு பிரசுரங்கள் மூல மும், ஒலிபெருக்கி மூலமும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதனை கடைபிடிக்காமல் பிளாஸ் டிக் பைகளை கொண்டு சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எக்ஸ்னோரா தன்னார்வ தொண்டர்கள் மூலம் ஸ்ரீரங்கத்தில் ஆங்காங்கே 51 இடங்களில் பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கீழே போடாமல் கொண்டு வந்து கொடுத்தாலோ, அல்  லது கீழே கிடக்கும் பிளாஸ் டிக் பொருட்களை சேகரித்து கொண்டு வந்து கொடுத் தாலோ உடன் இலவச பரிசு கூப்பன் வழங்கப்படும்.

ஜனவரி10ம் தேதி மாலை 6மணி முதல் மேற்காணும் 51 பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்களில் இலவச பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டு, 11ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பரிசு குலுக்கள் நடைபெறும். இதில் ஒருவருக்கு தங்க காசும், 5 நபர்களுக்கு வெள்ளி காசும், 10 பேருக்கு எல்.இ.டி பல்புகளும், 20 பேருக்கு திருகுறள் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும். எனவே வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் கொடையாளர்கள் தண்ணீர் பாக்கெட் இலவசமாக வழங்குவதையும், அன்னதானம் செய்யும்போது பிளாஸ்டிக் கேரி பைகளில் உணவு பொட்டலங்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதேபோல் திருச்சி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல் காத்திட அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உரிய கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலர்களால் பாரபட்சம் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.அன்னதானம் வழங்குவோர் கவனத்திற்கு பொது மக்கள் நலன் கருதியும் மாநகரை சுகாதாரமாக பராமரித்திடவும் அரசால் தடைசெய்யப்பட்ட 40 மைக்ரான் அளவு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம். விழா நாட்களில் அன்னதானம் வழங்குவோர் மாநகராட்சிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, பொது இடங்களில் குப்பைகளை தூக்கி எரியாமல் குப்பைதொட்டிகளில் போட வேண் டும் என மாநகராட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது.