Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு

Print PDF

மாலை மலர்              24.01.2014

சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
 
சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
சென்னை, ஜன. 24 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

பொங்கல் திருநாளில் மக்கள் நலன் கருதி தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 13 ஆயிரத்து 87 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் மக்கள் பயன் பெறும் வகையில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 3.39 கோடி மக்கள் நேரடியாக பயன் பெற்றனர். அதாவது தமிழக மக்கள் தொகையில் 46.95 சதவீதம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதற்கு உத்தரவிட்ட முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.

சென்னையின் இதய பகுதி போல் உள்ள 15 ஏக்கர் பரப்புடைய சேத்துப்பட்டு ஏரியை மக்கள் பயன்பெறும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பசுமை பூங்காவாக புனரமைக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

இதற்காக ரூ. 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் சேத்துப்பட்டு ஏரி வருங்காலத்தில் சிறந்த சுற்றுலா மையமாக மாறும். மழைநீர் சேகரிப்பு உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

நேரு விளையாட்டரங்கம் உள்பட பிற மாவட்டங்களையும் சேர்ந்து 17 இடங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கவும், உபகரணம் வாங்கவும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ. 4 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும் உலக கபடி போட்டி நடத்த ரூ. 1 கோடியும், ஸ்குவாஷ் போட்டி நடத்த ரூ. 75 லட்சமும் வழங்கியுள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கலந்த பாராட்டு.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டு.

தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் பாராட்டுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.