Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் நாளை 5 மண்டலத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

Print PDF

தினகரன்             22.01.2014 

மாநகரில் நாளை 5 மண்டலத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

கோவை, : கோவை மாநகராட்சியில் நாளை 5 மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

கோவை மாநகராட்சியில் நாளை 5 மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும் கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல், புதிய சொத்துவரி மற்றும் கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல், விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல் தொடர்பான இதர பணிகள், தொழில்வரி இனங்கள், புதிய இனங்கள் பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகளுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

நாளை (22ம் தேதி) கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் 32வது வார்டு மக்களுக்காகவும், மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் வார்டு அலுவலகத்தில் 5, 6, 7, 8, 9 ஆகிய வார்டு மக்களுக்காகவும் குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் 87, 88, 91, 92, 93 ஆகிய வார்டு மக்களுக்காகவும், வடக்கு மண்டலம் துடியலூர் வார்டு அலுவலகத்தில் 1, 2, 3, 4 ஆகிய வார்டு மக்களுக்காகவும், ஓசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகத்தில் 25, 72, 73, 74 ஆகிய வார்டு மக்களுக்காகவும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

இதையடுத்து வரும் 27ம் தேதி, பிப்ரவரி முதல் தேதி, 5ம் தேதி, 8ம் தேதி, 10ம் தேதி, 15ம் தேதிகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வார்டுகளுக்கு அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.  இத்தகவலை மேயர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.