Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி பணி நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்             23.01.2014 

பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி பணி நகராட்சி தலைவர் தகவல்

பழநி, : பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நக ராட்சி தலைவர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

பழநி நகராட்சிக்குட்பட்ட இடும்பன் இட்டேரி குறுக்கு தெருவில் பிற்படுத்தப்பட்ட மானிய நிதி 2013 -14ன் கீழ் ரூ.15 லட்சம் மதி ப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

இதுபோன்று காமரா ஜர் வீதியில் ரூ.2 லட்சம், ராஜா நகரில் ரூ.9 லட்சம், ஆவணி மூலவீதி மற்றும் அரசு மருத்துவமனை பகுதி யில் ரூ.3.50 லட்சம் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

மாசிமலை சந்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி,  ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஜீவானந்தம் சாலையில் வடிகால், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரன் தெருவில் மழைநீர் வடி கால், ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் இந்திரா நகர் மேற்கு பகுதியில் வடிகால் மற்றும் பாலம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் ரயிலடி சாலை, சித்தனாதன் தெரு, சுகதேவ் வீதி, கவுண்டர் இட்டேரி சாலைகளில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மங்களகவுண்டர் சந்து, மதனபுரம் குறுக்கு தெருவில் மழைநீர் வடிகால், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் 24வது வார்டில் கழிவறை மராமத்து,

ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் லயன் கிளப் சாலையில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டர் இட்டேரி வார சந்தை சாலையில் தார் தளம், ரூ.9.95 லட்சம் மதிப் பீட்டில் நகராட்சி அலுவலகம் மராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதவிர நகராட்சியின் பிற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாக்கடை அமை த்தல், ஆழ்குழாய் கிணறு என மொத்தம் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நகர்மன்ற ஒப்புதலுக்குப்பின், டெண் டர் விடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் வேலு மணி தெரிவித்துள்ளார்.