Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கோபிசெட்டிபாளையம்

குடியரசு தினவிழா கோபிசெட்டிபாளையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோபி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார்.

கோபி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் துரை தேசிய கொடியை ஏற்றினார். கோபி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ரேவதிதேவி தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதேபோல் கோபியில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இதேபோல் வெங்கடேஸ்வரா ஹை-டெக் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதல்வர் தங்கவேல் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் துணை முதல்வர் பிரகாஷ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கனகரத்தினம் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நிறுவன தாளாளர் கெட்டிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் இயக்குனர்கள் முருகசாமி, செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கூட முதல்வர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா இன்டர்நேசனல் பள்ளியில் இயக்குனர் ஜோதிலிங்கம் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் முதல்வர் ஹரிகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கவுந்தப்பாடியில் உள்ள வெங்கடேஸ்வரா நர்சரி மற்றும் பிரைமரி, வெள்ளாங்கோவில் வீனாவித்யாலயா ஆகிய பள்ளிக்கூடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் திக்விஜயன் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி வைத்தார்.

கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ.யில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தலைவர் சிராஜூதின் தலைமை தாங்கினார். தாளாளர் கார்த்திக்அரசு முன்னிலை வகித்தார். முதல்வர் சுரேஷ்குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து பேசினார். இதில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தன.

விழாவில், துணைமுதல்வர் கோவிந்தராஜன், அனைத்து துறை தலைவர்கள், ஐ.டி.ஐ. முதல்வர் ஏ.பி.ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் முதல்வர் ஆர்.செல்லப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோபி பி.கே.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரியின் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவில் வக்கீல் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இதில் தாளாளர் பி.என்.வெங்கடாசலம், முதல்வர் ஜெகதாலட்சுமணன், டாக்டர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாதேவி, சிவபாலன் ஆகியோரின் முன்னிலையில் ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.எஸ்.அய்யாசாமி தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியசாமி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.கே.முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமணன், ராஜேந்திரன், ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலத்தில் தலைவர் டி.செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் யு.எஸ்.சுந்தரராஜன் மற்றம் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். பூதப்பாடியில் உள்ள காந்தி சிலைக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி சாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மாணிக்கவாசகம், பேரூராட்சி செயல் அதிகாரி நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் பூர்ணம் கதிரழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் அலுவலக பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். வெங்கம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சூர்யாசிவக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அதிகாரி சின்னதுரை மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கிளாம்பாடி

கிளாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் செயல் அதிகாரி செல்வக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பாசூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் ஆறுமுகம், செயல் அலுவலர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கொடுமுடி

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆணையாளர்கள் பாலகிருஷ்ணன், ராஜூ மற்றும் அலுவலக பணியாளர்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் மனோகரன் மற்றும் கவுன்சிலர்கள், எஸ்.எஸ்.வி. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கொடுமுடி போலீஸ் நிலையம் முன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மரக்கன்றுகளை நட்டார். கொடுமுடி எஸ்.எஸ்.வி.மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, சீதாலட்சுமி பள்ளிக்கூடம், சி.எஸ்.ஐ.பள்ளிக்கூடம், கே.பி.கே.பள்ளிக்கூடம், ஸ்ரீ வள்ளி கல்வியியல் கல்லூரி, தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நகப்பாளையம் பள்ளிக்கூடம் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னிமலை

சென்னிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.என்.சாமிநாதன் தலைமை தாங்கினார். தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னிமலை பஸ்நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் கொடியேற்றினார். இந்த விழாக்களில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர்கள் குருநாதன், கதிரேசன், ரத்தினசாமி, முன்னாள் பொதுச்செயலாளர் மே.தா.கந்தசாமி, செந்தில்வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவர் சுப்புலட்சுமி அய்யாசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மூர்த்தி, சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துராமலிங்கமும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி(சத்தி) கே.ராஜ்குமார், சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகத்தில் ரேஞ்சர் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். அரசூர் ஊராட்சியில் அதன் தலைவர் சி.ஆர்.செல்வராஜ், குத்தியாலத்தூர் ஊராட்சியில் தலைவர் பாக்கியமணி தேவராஜ், இண்டியம்பாளையம் ஊராட்சியில் தலைவர் எஸ்.கவிதா, கொமராபாளையம் ஊராட்சியில் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன், கோணமூலை ஊராட்சியில் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம், மாக்கிணாங்கோம்பை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் திலகவதி திருமூர்த்தி, ராஜன்நகர் உராட்சியில் தலைவர் கே.நஞ்சுண்டமூர்த்தி, சதுமுகை ஊராட்சியில் தலைவர் என்.எஸ்.வரதராஜ், செண்பகபுதூர் ஊராட்சியில் தலைவர் வி.என்.சின்னசாமி, உக்கரம் ஊராட்சியில் தலைவர் ராம்கருணாநிதி ஆகியோர் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

சிவகிரி

சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.

அந்தியூர்


ஒலகடம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் சார்பில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார தலைவர் சந்திரன், நகரத்தலைவர் சண்முகம் உள்பட காங்கிரசார் பலர் கலந்துகொண்டனர்.

பட்லூர் காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சேதுவெங்கட்ராமன் தலைமையில் காந்தி உருவபடத்திற்கு மாலை அணி வித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில் தொண்டர் அணி பிரகாஷ் உள்பட காங்கிரசார் பலர் கலந்துகொண்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி

பவானிசாகர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் வேலுமணி, ஆணையாளர் பத்மா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 29 January 2014 07:00