Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானாமதுரை, இளையான்குடி பகுதியில் குடியரசு தின விழா

Print PDF

தினமணி          27.01.2014 

மானாமதுரை, இளையான்குடி பகுதியில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் குடியரசு தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

 மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் அமானுல்லா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தலைவர் ஜோசப்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.

 மானாமதுரை பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மாதா கல்வி நிறுவனங்கள், செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களிலும் ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றிலும் குடியரசு தின விழா நடைபெற்றது. இங்கு தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பல்வேறு ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

 இளையான்குடி பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டது. இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் நடந்த விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய பகுதியில் ஊராட்சி மன்றங்களில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருப்புவனத்தில்


திருப்புவனம், ஜன. 26: சிவகங்கை மாவட்டம் கட்டமன்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குடியரசு தின விழா, பள்ளித் தலைமை ஆசிரியர் லூர்து சேவியர் தலைமையில் நடைபெற்றது.

 கிராமத் தலைவர் செல்லையா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகள் கு.சாந்தா, ச.யோகப்பிரியா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கிராமக் கல்விக் குழுத் தலைவர் கே.தமிழ்மணி, ஆசிரியர்கள், மேலாண்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.