Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Print PDF

தினகரன்                29.01.2014 

தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தூத்துக்குடி, :தூத்துக்குடியில் மாநகராட்சி, ஸ்டெர் லைட், மெர்கன்டைல் வங்கி உள்ளிட்ட இடங்களில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 65வது குடியரசு தின விழா நடந்தது. விழாவுக்கு கமிஷனர் மதுமதி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் (பொறுப்பு) சேவியர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மண் டல தலைவர் கோகிலா, கவுன்சிலர்கள்வீரபாகு, சாமுவேல் ஞானதுரை, மெஜூலா, அகஸ்டின், ஜெயபாரதி, இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழா வில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தூத்துக்குடிய தீய ணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தேசியகொடியை ஏற்றிவைத்தார். இதில் உதவி மாவட்ட அலு வலர் லோகிதாஸ், நிலைய அலுவலர்கள் சண்முகம், ராஜூ உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதனை முன்னிட்டு தீய ணைப்பு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

தூத்துக்குடி ஸ்டெர் லைட் காப்பர் நிறுவனத் தில் 65வது குடியரசு தின விழா கொண்டாடப்பட் டது. தூத்துக்குடி வருமான வரித்துறை உதவி ஆணை யர் ஹரி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் ஸ்டெர்லைட் நிறு வன பாதுகாப்பு துறையினரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடந்த விழாவில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஸ்டெர் லைட் முதன்மை செயல் அதிகாரி ராம்நாத், மனிதவளத்துறை தலைவர் சுரேஷ் போஸ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மேலும் சமூக தொடர்புத்துறை தலைவர் ரமேஷ், வர்த்தகபிரிவு தலைவர் தனவேல், நிறுவன செயலா ளர் ராஜீவ் சோபே, பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அனுப், பாலகிருஷ்ணன் உட்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 65வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. வங்கி இயக்குநர் விவிடி விக்ரமன், தேசிய கொடி யினை ஏற்றி வைத்து பேசி னார். வங்கியின் இயக்குநர் அரவிந்தகுமார், வணிக வளர்ச்சி துறை பொது மேலாளர் செல்வன் ராஜ துரை, ஆகியோர் முன் னிலை வகித்தனர். விழா வினை முன்னிட்டு வங்கி யின் மூலம் நலிவுற்ற பிரிவினருக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன்கள் மற்றும் சிறுவர், சிறுமிய ருக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர்கள் குண சேகரன், ஆறுமுகபாண்டி யன்,உதவிப் பொது மேலா ளர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதி பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியர் அமராவதி, கயத்தாறு உதவி தொடக்க கல்வி அலுவலர் பவணந்தீஸ்வர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலு வலர் முத்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இன்பென்ட் கல்வி அறக்கட்டளை சார்பில் உண்டு உறைவிடப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு இந்திய மருத்துவ சங்க பொருளாளர் டாக்டர் ராமமூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். டாக்டர் செம்மலர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகி ராஜ் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசு வழங்கப்பட் டது. ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பாசிரியர் அல் போன்ஸா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளிக் குழு தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். சங்க உபதலைவர் குருசாமி, செய லாளர் பழனிகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பள்ளி செயலாளர் செல்வராஜ் தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியர் மாரியப்பன் வரவேற் றார். ஆசிரியர் கலாதேவி நன்றி கூறினார்.

கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு பாபு தலைமை வகித்தார். ஜேசிஐ டைனமிக் செயலா ளர் பிரபு முன்னிலை வகித் தார். வாசகர் வட்ட தலை வர் ராஜமாணிக்கம் தேசிய கொடியேற்றினார். நூலகர் பூல்பாண்டி வரவேற்றார். இலக்கிய உலா ரவீந்தர், வாசகர் வட்ட துணை தலைவர் நடராஜன், பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன், நூலக பணியாளர்கள் கலைசெல்வி, சுமதி, மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.