Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேகரிக்க திட்டம் தயார் கருத்தரங்கில் ஆணையர் தகவல்

Print PDF

தினகரன்                30.01.2014

திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேகரிக்க திட்டம் தயார் கருத்தரங்கில் ஆணையர் தகவல்

திருச்சி, : கேரளாவை போன்று திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேக ரிக்க திட்டம் தயார் செய்து வருவதாக கருத்தரங்கில் ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி மற்றும் சென்னை மழை இல்லம் அமைப்பு சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கம் பெமினா ஓட்டலில் நேற்று நடந்தது. மழை இல்லம் நிர்வாக இயக்குனர் சேகர் ராகவன் தலைமை வகித்தார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசியதாவது: திருச்சியில் 1.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமை ப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ஆயிரம் வீடுக ளில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியில் 50 சதவீத இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஆண்டுக்கு 40 நாட்கள் மழை பெய்கி றது. இது சராசரியாக 835 மி.மீ. என பதிவாகியுள்ளது. இதில் 60 சதவீதம் மழைநீர் வீணாகிறது. திருச்சி மாநகரில் மழைநீர் சேகரிக்க பல்வேறு கட்ட முயற்சி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகரில் மேட்டுப்பகுதி, சமமான பகுதி, தாழ்வான பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தாழ்வான பகுதிகளில் ஏராளமான குடிசை வீடு கள் இருக்கிறது. மேட்டுப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை மேட்டு பகுதியிலேயே சேகரிக்க மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 90 சத வீத அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 43 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்ச்சாலையில் ரூ.183 கோடியில் மழைநீர் சேகரிப்பு அமை ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாவதில்லை. அதை பார்வையிட்டு வந்துள்ளோம். அதுபோல் திருச்சியிலும் மழைநீர் வீணாகாமல் கிணற்றடி நீராக மாற்ற பல்வேறு திட்டங்கள் தயார் படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு ஆணையர் பேசினார். தஞ்சை மண்டலத்தில் உள்ள நகராட்சி ஆணையர் கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.