Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா

மதுரை, நவ. 1: மதுரை மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆணையர் எஸ்.செபாஸ்டின் தலைமை வகித்தார். மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்து, உள்ளாட்சி தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசு வழங்கி பேசியதாவது:

உள்ளாட்சியில் நடைபெறும் அனைத்துப் பணிகளும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உள்ளாட்சி தின விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உள்ளாட்சிகளின் செயல்பாடு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவுவது தெரிந்தவுடன், மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு மூலமாக நாளொன்றுக்கு 3 சிறப்பு முகாங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, தமுக்கம் மைதானத்தில் இருந்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வரை உள்ளாட்சி தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில், பள்ளி மாணவ, மாணவியர், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

உதவி ஆணையர் (தெற்கு) .தேவதாஸ் வரவேற்றார். மண்டலத் தலைவர்கள், உதவி நகர் நல அலுவலர் யசோதமணி, உதவி ஆணையர்கள் சந்திரசேகரன், யு.அங்கயற்கண்ணி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டத்தில்...: இதேபோன்று, மதுரை மாவட்டத்தின் உள்ள நகராட்சி, ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தின விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.