Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெடுஞ்சாலைத் துறையிடம் மேலும் 3 ரயில்வே மேம்பால பணிகளை ஒப்படைக்க ராக் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 2.11.2009

நெடுஞ்சாலைத் துறையிடம் மேலும் 3 ரயில்வே மேம்பால பணிகளை ஒப்படைக்க ராக் வலியுறுத்தல்

கோவை, நவ. 1: கோவை மாநகரில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட 7 சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் மாநகராட்சி ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

இத்துடன், மேலும் 3 ரயில்வே மேம்பாலப் பணிகளையும் சேர்த்து ஒப்படைக்க வேண்டும் என ராக் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ராக் துணைத் தலைவர் பாலசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை நகரில் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட 7 சாலைகளை மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையிடம் வழங்க எடுத்துள்ள முடிவை ராக் வரவேற்கிறது.

ஆனால், முக்கியமான 3 ரயில்வே மேம்பாலங்கள் இப் பட்டியலில் இடம் பெறவில்லை. கணபதி - ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங், பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள லெவல கிராசிங் ஆகிய பணிகள் இடம்பெறவில்லை.

மேலும் மூன்றாவதாக, மாநகரின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் வடகோவை மேம்பாலம் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது.

இதனால், இந்த 2 பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, கிக்கானி மேல்நிலைப் பள்ளிக்கு அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். மேற்படி, 3 பணிகளும் மாநாகராட்சி பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில் உள்ள லட்சமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம் சந்திப்பு, நூறடி சாலை சந்திப்பு, சிவானந்தா காலனி - மேட்டுப்பாளையம் சாலை சந்திப்புகளில் மேம்பாலங்களும், பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி லெவல் கிராசிங்கில் ரயில்வே மேம்பாலமும் அமைக்க வேண்டும்.