Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விடிய விடிய மழை: 40 மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றம்; மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 05.11.2009

விடிய விடிய மழை: 40 மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றம்; மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, நவ. 5-

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 120 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் ரோடு களில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். 40 இடங்களில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சுரங்கப்பாதைகள் அனைத்திலும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. சிறிதளவு தண்ணீர் தேங்கியதும் உடனடியாக வெளியேற்றப்படுகிறது.

வியாசர்பாடி கணேசபுரம் பாலத்தின் கீழ் தண்ணீர் அதிக அளவில் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. 50 குதிரைத்திறன் கொண்ட 2 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல் கே.எம். கார்டன், ஜி.என். செட்டி ரோடு, பசுல்லா ரோடு ஆகிய இடங்களிலும் ரோடுகளில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.

மழைநீர் அகற்றப்படுவதை மேயர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்.

வேளச்சேரி, திருவான் மியூர், அடையாறு பகுதிகளில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். அந்த பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் வெளியேற்ற உஷாராக இருக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

ரிப்பன் மாளிகையில் வெள்ள கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் பற்றி பொது மக்கள் 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.