Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம்: மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கு ஒரு மையம்

Print PDF

தினமணி 12.11.2009

முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம்: மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கு ஒரு மையம்

ஈரோடு, நவ. 12: ஈரோடு மாநகராட்சி பகுதியில் முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 3 வார்டுகளுக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி திருமண மண்டபம், விநாயகர் கோயில் வீதி மாநகராட்சி பள்ளி, காமராஜர் மேல்நிலைப்பள்ளி, திருநகர் காலனி மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

திருநகர் காலனி பள்ளியில் புகைப்படம் எடுக்கும் பணியை மேயர் குமார் முருகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது:

ஒரு மையத்துக்கு 3 வார்டுகள் வீதம் புகைப்படம் எடுக்கப்படும். ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள அனைவரையும் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கவுன்சிலர்கள் அன்பழகன், குணசேகரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:29