Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்

Print PDF
தினமணி 12.11.2009

சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்

சென்னை, நவ.12: குடிநீர், கழிவு நீர் தொடர்பான பிரச்னைகள், கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறிப்பிட்ட பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (நவ. 14) திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கொடுங்கையூர், தண்டையார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்காக, தண்டையார்பேட்டை சபாபதி தெருவில் அமைந்துள்ள பகுதி அலுவலகம் 1-ல் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக எம்.சி.ரோடு பகுதி அலுவலகம் 2-லும், பெரம்பூர், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக எ.3 வடிவேலு 2-வது குறுக்குத் தெருவில் உள்ள பகுதி அலுவலகம் 3-லும், கீழ்பாக்கம், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர்களுக்காக நியூ ஆவடி சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 4-லும் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அண்ணாநகர், முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக அண்ணா நகரில் உள்ள பகுதி அலுவலகம் 5-லும், முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக டி.எஸ். கிருஷ்ணாநகர் பிரதான சாலையில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்திலும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக டாக்டர் ரங்கா சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 6-லும், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக சத்திய மூர்த்தி சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 7-லும், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதி மக்களுக்காக முத்து கிருஷ்ணன் சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 8-லும் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக வி.வி. கோயில் தெருவில் உள்ள பகுதி அலுவலகம் 9-லும், ஆழ்வார்ப்பேட்டை, மயிலாப்பூர் பகுதி மக்களுக்காக இந்திரா நகரில் உள்ள பகுதி அலுவலகம் 10 ()-விலும், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி பகுதி மக்களுக்காக இந்திரா நகரில் உள்ள பகுதி அலுவலகம் 10 ()-விலும் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Last Updated on Friday, 13 November 2009 09:40