Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குரூஸ் பர்னாந்து பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சர், மேயர் மாலை

Print PDF

தினமணி 16.11.2009

குரூஸ் பர்னாந்து பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சர், மேயர் மாலை

தூத்துக்குடி, நவ. 15: தூத்துக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் பல்வேறு கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், நகர தி.மு.. செயலர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் உள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம் மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன், நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் மற்றும் உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், அதன் தலைவர் எஸ். ஜஸ்டின், குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன், மாநில பேச்சாளர் அம்பிகாவதி, மாவட்ட மீனவரணி செயலர் பி. அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தார்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் எம். பார்த்திபன், தெற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் எம். ஐயப்பன், வடக்கு மாவட்ட சேவாதள தலைவர் ஜி. ரமேஷ்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரதர் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் சந்திரசேகரன், பொதுச்செயலர் ஹெர்மன் கில்டு ஆகியோர் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.

துணைத் தலைவர்கள் அலாய், அந்தோணி சேவியர், தனம் விக்டோரியா, குரூஸ் பர்னாந்து பேரவை தலைவர் சிக்ஸ்டன், செயலர் ரெனால்டு வி. ராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக பரதர் நலச்சங்கம் மற்றும் குரூஸ் பர்னாந்து பேரவையினர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக வந்தனர்.

தொடர்ந்து குரூஸ் பர்னாந்து பேத்தி ரமோலா, குரூஸ் பர்னாந்து சிலையை பராமரித்து வரும் ஜேனோ என்ஜினீயரிங் நிறுவன உரிமையாளர் ஜேனோ, தூத்துக்குடி வட்டத்தெப்பம் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் யு. நடராஜன், செயலர் பா. மூக்கையா ஆகியோர் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். ÷பா... சார்பில், அதன் மத்திய மாவட்டச் செயலர் திருமலைராஜ், குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தார். அமைப்புச் செயலர் பிரான்சிóஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

÷அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அதன் மாவட்ட அவைத் தலைவர் என்.பி.டி. பாலா, குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தார். நகர செயலர் பி.எம். அற்புதராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அல்போன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கண்டிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 16 November 2009 06:45