Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிதம்பரம் நகராட்சி துரித நடவடிக்கை

Print PDF

தினமணி 20.11.2009

சிதம்பரம் நகராட்சி துரித நடவடிக்கை

சிதம்பரம், நவ. 19: சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சிதம்பரம் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீர் தற்போது வடியத் தொடங்கியுள்ள நிலையில் அப் பகுதியில் வாந்திபேதி, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் பரவாமல் தடுக்க சிதம்பரம் நகராட்சி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவுப் பணியாளர்களை கொண்டு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு ஆகியவற்றை தூவி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆணையர் ஜான்சன் நேரில் பார்வையிட்டுó நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கொசுக்கள் அதிகமாகி சிக்குன்குனியா, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களை தடுக்க பாக்கிங் மெஷின் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகரில் 3 கைமெஷின்கள், 1 பெரிய மெஷின் மூலமும் புகை மருந்து அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அடிக்கப்பட்டு வருகிறது. குடிநீரை காய்ச்சி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு ஆணையர் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.