Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிறப்பு, இறப்பு பதிவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Print PDF

தினமணி 20.11.2009

பிறப்பு, இறப்பு பதிவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கரூர், நவ. 19: கரூர் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தலைமை வகித்துப் பேசியது:

ஊரக, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் நிகழும் ஒவ்வொரு பிறப்பு, இறப்புகளையும் நிகழ்வு நடைபெற்ற பகுதிகளிலேயே சம்பத்தப்பட்ட பதிவாளரிடமும், கிராமப்புரங்களில் கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலரிடமும், நகராட்சிப் பகுதியில் துப்புரவு ஆய்வாளரிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலைய சுகாதார ஆய்வாளரிடமும் 21 நாள்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

21 நாள்களுக்கு மேல் 30 நாள்கள் வரை பதிவு செய்ய ரூ. 2 மட்டும் காலதாமதக் கட்டணமாக செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். 30 நாள்கள் முதல் ஒரு வருடம் காலதாமதம் ஏற்படின் நிகழ்வுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ரூ. 5 கட்டணமாகச் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம்.

ஒரு ஆண்டு முடிந்திருப்பின் நீதிமன்ற ஆணையுடன் ரூ. 10 செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து ஆரம்ப சுகாதார, அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிறப்புகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களை நிலையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

ஊரக, பேரூராட்சி, நகரப் பகுதிகளில் நிகழும் பிறப்பு, இறப்புகள் 21 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருப்பின் வீட்டில் நிகழ்வு நடைபெற்றிருந்தால், சம்மந்தப்பட்ட பதிவாளரிடமும், அரசு, தனியார், மகப்பேறு நிலையத்தில் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலரிடமும், துணை சுகாதார நிலையத்தில் நடந்தால் கிராம சுகாதார செவிலியர்களிடமும் இலவசமாக சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக சான்றிதழ் பெற ரூ. 5 கட்டணமாகச் செலுத்தவேண்டும்.

குழந்தையின் பெயர் பதிவினை பிறப்பு பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் ஒரு ஆண்டு வரை இலவசமாகப் பதிவு செய்து, பெயருடன் கூடிய சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்குப் பின் குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்ய ரூ.5-ஐ காலதாமதக் கட்டணமாகச் செலுத்தி பெயருடன்கூடிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.பெயர் பதிவினை பிறந்த தேதியில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே பதிவுசெய்து கொள்ள முடியும். 2000-க்கு முன் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து பிறப்புகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவினை 31-12-2014 வரை மட்டும் பதிவு செய்து கொள்ளமுடியும் என்றார் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி.

மாவட்ட வருவாய் அலுவலர் சி. முனிரெத்தினம், சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் சதாசிவம், இணை இயக்குநர் அக்பர்அலி, உதவி இயக்குநர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.