Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

Print PDF

தினமணி 01.12.2009

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

வேலூர்,நவ.30:வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மேயர் ப. கார்த்திகேயன் கூறினார்.

வேலூர் மாமன்றக் கூட்டம் மேயர் ப. கார்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேயர் தி.. முகமது சாதிக் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வேலூரை அடுத்த சாத்துபாளையத்தில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட 8 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதன் நிலை என்ன என்று காங். உறுப்பினர் சீனிவாசகாந்தி கேள்வி எழுப்பினார்.

அந்த இடம் பாதுகாப்பாக உள்ளது. ஏற்கெனவே குப்பை கொட்டிவரும் சதுப்பேரியில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க இரு நிறுவனங்கள் கேட்டுள்ளன. அரசின் முறையான அனுமதி கிடைத்ததும் அது செயல்படுத்த உள்ளதால் குப்பைகள் குறித்து இனி கவலையில்லை என்றார் மேயர்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிஎம்சி மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளதா என்று திமுக உறுப்பினர் தயாள்ராஜ் கேள்வி எழுப்பினார்.

சிஎம்சியை சேர்க்க ஆட்சியரிடம் நானும், எம்எல்ஏவும் கோரிக்கைவிடுத்துள்ளோம். விரைவில் செயலாக்கத்திற்கு வரும்.

வேலூரில் இந்த திட்டத்துக்காக டிசம்பர் 7 முதல் 14}ம் தேதி வரை வருவாய்த்துறையினர் புகைப்படம் எடுக்க வருகின்றனர். உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் மேயர்.

நகரில் சிக்குன் குன்யா, வைரஸ் காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவியுள்ளன. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதற்கான மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக உறுப்பினர் நீதி வலியுறுத்தினார்.

மேலும் அதிமுக உறுப்பினர்கள் சண்முகம், பிச்சமுத்து,மதிமுக உறுப்பினர் கோபி, காங். உறுப்பினர்கள் பி.பி. ஜெயபிரகாஷ், பாபு, தேமுதிக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.புதைசாக்கடை திட்டத்திற்கு திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.10.50 கோடி கூடுதலாக ஒதுக்குவது, ஆர்க்காடு சாலையில் சிஎம்சி மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டிக்கொள்ள அனுமதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.