Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகரில் தெருவிளக்குகள் பராமரிப்பு: எரியாத விளக்குகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி 2.12.2009

சேலம் மாநகரில் தெருவிளக்குகள் பராமரிப்பு: எரியாத விளக்குகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்


சேலம், டிச.1: சேலம் மாநகரில் தெருவிளக்குகள் பராமரிக்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தால் இதுகுறித்து தொலைப்பேசியில் தகவல் தெரிவிக்கலாம்.

÷இது குறித்து மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி:

÷சேலம் மாநகரில் 26,004 தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தெருவிளக்குகளை பராமரிக்கவும், எரியாமல் உள்ள விளக்குகளை சரி செய்திடவும் டிசம்பர் 5-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

÷இந்த குழுவில் நான்கு மண்டல உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், கம்பியாளர், மாநகராட்சியின் தெரு விளக்கு பராமரிப்பு தனியார் நிறுவனமான ஆகாஷ் நிறுவனப் பணியாளர்கள் உள்ளனர்.

இக்குழுவினர் 2-ம் தேதி சூரமங்கலம் மண்டலத்தில் 18,19,20, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 7,8,12, அம்மாப்பேட்டை மண்டலத்தில் 32,33,34, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 48,49,50 ஆகிய டிவிஷன்களிலும், 3-ம் தேதி 21,22,23,13,14,15,35,36 மற்றும் 37 ஆகிய டிவிஷன்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்கின்றனர். 4-ம் தேதி 24,25,26,16,17,29,38,39,40,54,55,56 ஆகிய டிவிஷன்களிலும், 5-ம் தேதி 27,28,30,31,41,42,43,44, 57,58,59 மற்றும் 60 ஆகிய டிவிஷன்களிலும் பணி மேற்கொள்கின்றனர்.

÷எனவே மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருந்தால் அது குறித்து கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ÷மாநகராட்சி மைய அலுவலகம்-2212844, சூரமங்கலம்-2387514, அஸ்தம்பட்டி-2314646, அம்மாப்பேட்டை-2263161, கொண்டலாம்பட்டி-2461616.