Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு?

Print PDF

தினமணி 0 7.12.2009

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு?

பெங்களூர்,டிச.6: உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவின்படி பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் தேர்தல் மாநகராட்சித் தேர்தல் நடக்கும் என்று கூறப்படுகிறது.

பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. இதை அடுத்து பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்ட மன்றத்துக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு 7 நகரசபை, டவுன் பஞ்சாயத்து, 110 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைத்து வார்டுகளின் எண்ணிக்கையை 100-ல் இருந்து 198 ஆக அதிகரித்தது.

மாநகராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் நவம்பர் மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியலை நவம்பர் 30-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும், மாநகராட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 7-ம் தேதிக்குள்ó அறிவிக்க வேண்டும் என்று இறுதி உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் வார்டு இடஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டது. மொத்தம் 198 வார்டுகளில் 67 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காலக்கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.

உத்தரவுப்படி திங்கள்கிழமை மாலைக்குள் மாநகராட்சி மன்றத்துக்கான தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆளும்கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் தேர்தல் அறிவிப்பை ஆவலனுடன் எதிர்பார்த்துள்ளன.

Last Updated on Monday, 07 December 2009 07:29