Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்று முதல் சேலம் மாநகராட்சியில் விடுபட்ட வாக்காளர் சேர்ப்பு

Print PDF

தினமணி 16.12.2009

இன்று முதல் சேலம் மாநகராட்சியில் விடுபட்ட வாக்காளர் சேர்ப்பு

சேலம், டிச.15: சேலம் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்களை, வீடு வீடாகச் சென்று சேர்க்கும் பணி புதன்கிழமை (டிசம்பர் 16) தொடங்குகிறது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் சரிபார்க்கும் பணி தொடர்பான கூட்டம் மாநகராட்சி கருத்தரங்கக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையர்கள் தங்கவேலு, நெப்போலியன், துணை வட்டாட்சியர் ஆத்மராமன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.