Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த ஆடுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 19.12.2009

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த ஆடுகள் பறிமுதல்

உடுமலை,டிச.18: உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த ஆடுகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

÷உடுமலை நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் ரோடுகளில் சுற்றித் திரியும் ஆடுகளை பறிமுதல் செய்ய நகராட்சி ஆணையாளர் ஆ.சுந்தராம்பாள் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் சுற்றித் திரிந்த ஆடுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செயதனர்.

÷காலை 8 மணிக்கு ஏரிப்பாளையம் பகுதியில் துவங்கி திருப்பூர் ரோடு, தளி ரோடு, பழைய மற்றும் மத்திய பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு, ரயில் நிலையம் பகுதி, காந்தி சவுக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த 54 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

÷பின்னர் இந்த ஆடுகள் அனைத்தும் ராஜேந்திரா ரோட்டில் உள்ள நகராட்சி மாட்டுத் தொழுவத்திற்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டன.

÷இது குறித்து நகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கூறியது:போக்குவரத்திற்கு இடையூறாக மேயும் ஆடுகளை தொடர்ந்து பறிமுதல் செய்ய உள்ளோம். முதல் தடவையாக இருப்பதால் ஆட்டின் உரிமையாளர்களிடம் ஒரு ஆட்டிற்கு ரூ.100 மட்டும் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது தடவையாக பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.200அபராதம் விதிக்கப்படும். மூன்றாம் முறையாக இருந்தா ல் அந்த ஆடுகள் ஏலத்தில் விடப்படும் என்றனர்.

÷சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன்,காமராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த நடவடிக்கைகளின்போது உடன் இருந்தனர்.