Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அழகுபடுத்தப்பட்ட மெரீனா; முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF
தினமணி 21.12.2009

அழகுபடுத்தப்பட்ட மெரீனா; முதல்வர் திறந்து வைத்தார்

சீரமைக்கப்பட்ட மெரீனா கடற்கரைப்பூங்காவை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) மேயர் மா. சுப்பிரமணியன், துணை முதல்வர

சென்னை, டிச.20: ரூ.26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரையை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

உலகின் மிகப் பெரிய கடற்கரைகளில் ஒன்றாக மெரீனா கடற்கரை விளங்கி வருகிறது. ÷கடந்த 1884}ம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் என்பவர் கடற்கரையில் முதல் முதலாக நடைபாதையை அமைத்து அதற்கு மெரீனா எனப் பெயர் சூட்டினார்.

அதன்பின், மெரீனாவை அழகுபடுத்தும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை கோட்டையின் எதிரில் ரூ.10 கோடி செலவில் புதுப் பொலிவுடன் பூங்கா திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேப்பியர் பாலம் மூலம் கலங்கரை விளக்கம் வரை சுமார் 3.1 கி.மீ. நீளமுள்ள மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் பணி கடந்த 2008 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

பசுமைப் புல்வெளிகள் கொண்ட 14அமரும் இடங்களில் பல்வேறு வண்ணங்களிலான ஓடுகளும்,சுவர்ப் பகுதிகளில் கிரானைட் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி மேற்கொள்ள...

நடைபயிற்சி மேற்கொள்வதற்காக சிமெண்ட் கற்களால் ஆன நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகள், தமிழ்ச் சான்றோர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சிலைகளின் மீது, ஒளிவீசும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கார்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், நவீன கழிப்பறைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, ரூ.25.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ள மெரீனா கடற்கரையை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு..ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி, தங்கம் தென்னரசு, மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஷ்ரீபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.