Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கவுன்சிலர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தினமணி 22.12.2009

நகராட்சி கவுன்சிலர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

புதுச்சேரி, டிச. 21: புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

÷புஸ்ஸி வீதியில் உள்ள நியூ கம்ப்யூட்டர் எஜூகேஷன் சென்டர் என்ற நிறுவனம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியை இலவசமாக அளிக்கிறது.

÷இந்தப் பயிற்சி வகுப்பை நகராட்சித் தலைவி டாக்டர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். புஸ்ஸி தொகுதி எம்எல்ஏ ஆனந்து தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் நிறுவன இயக்குநர் சுஜாதா தீபக் முன்னிலை வகித்தார்.