Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடியிருப்பு பகுதியில் நாய்களை வளர்க்க லைசென்ஸ் வேண்டும்

Print PDF

தினகரன் 30.12.2009

குடியிருப்பு பகுதியில் நாய்களை வளர்க்க லைசென்ஸ் வேண்டும்

சென்னை : கோவை சர்க்கியூட் ஹவுஸ் சாலையை சேர்ந்த விக்ரம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், Ôஎன் வீட்டில் 15 நாய்களை வளர்க்கிறேன். லைசென்ஸ் இல்லாமல் குடியிருப்பு பகுதியில் நாய் வளர்ப்பது சட்ட விரோதமானது. எனவே, நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோவை ஆர்டிஓ உத்தரவிட்டார். இது சட்டவிரோதமானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்Õ என்று கூறியிருந்தார். வழக்கை நீதிபதி தமிழ்வாணன் விசாரித்தார். ஆர்டிஓ தரப்பில் அரசு வக்கீல் குமணன் ஆஜராகி, ‘Ôநாய்களை வளர்க்க கோவை மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெற வேண்டும். அனுமதி இல்லாமல் 30க்கும் மேற்பட்ட நாய்களை மனுதாரர் வளர்க்கிறார். எனவே, நாய்களை அகற்ற ஆர்டிஓ உத்தரவிட்டது சரிதான்’Õ என்று வாதாடினார். . இதை கேட்ட நீதிபதி, ‘Ôநாய் வளர்ப்பு சட்டப்படி மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெற வேண்டும். மனுதாரர் லைசென்ஸ் பெறாததால், நாய்களை அகற்ற ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவு சரிதான். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்’Õ என்று தீர்ப்பளித்தார

Last Updated on Wednesday, 30 December 2009 07:20