Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இனாம் கரூர் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

Print PDF

தினகரன் 30.12.2009

இனாம் கரூர் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

கரூர்: இனாம் கரூர் நகராட்சியில் சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்காக சிறப்பு முகாம் நேற்று இனாம்கரூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஏராளமானோர் விண்ணப்பங்களை அளித்தனர்.
உரிய கட்டணம் செலுத்தி வரி மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மற்றம் கோரிய விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரியவர்களுக்கு சான்றிதழ் ஆகியவற்றை இனாம் கரூர் நகராட்சி தலைவி கவிதா கணேசன், செயல் அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தங்கவேல், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ரேவதி சிவா, கிரிவாசகன், பொன்னுசாமி, கோபாலகிருஷ்ணன், காளியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:35