Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகள் சிறைபிடிப்பு

Print PDF

தினமணி 08.01.2010

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகள் சிறைபிடிப்பு

திருவண்ணாமலை, ஜன. 7: திருவண்ணாமலை நகர சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை சிறைபிடிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபடவும், கிரிவலம் செல்லவும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் அவை முட்டி விடுவதால், பக்தர்கள் காயமடைகின்றனர்.

இதனால் நகரில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் எஸ்.சேகர், நகர்நல அலுவலர் ராம்குமார், பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகிகள் நரசிம்மன், அரவிந்த், எக்ஸ்னோரா இந்திரா செüந்திரராஜன், கவுன்சிலர்கள் ரவி, பிரியா விஜயரங்கன், ஜமீலாபீவி, முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வருங்காலத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நகராட்சி, காவல்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் இரண்டாம் முறையாக பிடிக்கப்படும் கால்நடைகளை பொது ஏலத்தில் விட வேண்டும். முதல்முறையாக பிடிக்கப்படும் கால்நடைகளை மூன்று நாள்களுக்கு அபராதம் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வேலூரில் உள்ள கோசாலையில் அவற்றை ஒப்படைப்பது, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் குறித்து புகார் செய்ய பிராணிக் வதை தடுப்புச் சங்க ஆய்வாளர் செல்போன்-98401 22654, நகராட்சி ஆய்வாளர்கள் செல்போன்-93442 89438, 93442 89349 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் ஆகிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கால்நடைகளை நகரில் சுற்றித் திரியவிடாமல் அவற்றின் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுóள்ளார்.

Last Updated on Friday, 08 January 2010 10:26