Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவீன எரிவாயு தகன மேடை திறப்பு : மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 10.01.2010

நவீன எரிவாயு தகன மேடை திறப்பு : மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை : மதுரையில், நவீன எரிவாயு தகன மேடை திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தலைமையில் நடந்தது.

பின், கமிஷனர் பத்திரிகையாளர் களிடம் பேசியதாவது: மாநகராட்சி மூலம் 2.50 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை ஜன., 19ல் திறக்கப்படவுள்ளது. இதில் தியான மண்டபம், முடி எடுக்கும் இடம், கார் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, தொலைபேசி வசதி, கழிப்பறை, குளியலறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ் வசதியுடன் சடலத்தை கொண்டு வருதல், மொட்டை அடித்தல், இறப்பு சான்றிதழுடன், சீருடை பணியாளர்கள் மூலம் தகனம் செய்ய 1350 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சடலங்களை எரியூட்டும் வசதி உள்ளது. இந்த மயானம் மதுரை டவுன் ரோட்டரி கிளப் மூலம் பராமரிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக 209 0900 தொலைபேசி எண்ணும் வழங்கப் பட்டுள்ளது என, தெரிவித்தார்.

கூட்டத்தில், தலைமை பொறியாளர் சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர்கள் பாஸ்கரன், தேவதாஸ், அங்கையற் கண்ணி, ராஜகாந்தி, சிவன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் தாமோதரன், மதுரம், சேதுராமலிங்கம் உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி, உதவி நகர் நல அலுவலர் டாக்டர் யசோதமணி மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.