Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Print PDF

தினமலர் 16.01.2010

சென்னை மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

சென்னை : சமத்துவ பொங்கல் விழா சென்னை மாநகராட்சியில் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு 62 லட்சம் ரூபாய் செலவில், சீருடைகளும் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் பொங்கல் திருநாளையொட்டி, சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப் பட்டது.விழாவிற்கு சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங் களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் ராஜேஷ் லக்கானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவையொட்டி, சென்னை மாநகராட்சியில் பணி புரியும் 12 ஆயிரத்து 186 பணியாளர்களுக்கு 62 லட்சம் ரூபாய் செலவில், இலவசமாக இரண்டு செட் சீருடைகள் வழங்கி மேயர் சுப்ரமணியன் பேசும் போது, ""சாதி, சமயமற்ற தமிழகத்தை காண வேண்டி உள்ளாட்சி அமைப்புகள் சமத்துவ பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார். இதன்படி, சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது,'' என்றும் தெரிவித் தார்.சிறுவர், சிறுமியருக்கு உதவி: ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள "இனிய உதயம்' தொண்டு நிறுவனம் சார்பில், "தமிழா... தமிழா' என்ற பொங்கல் விழா கொண்டாடப் பட்டது.இதில் வடசென்னை தொகுதி எம்.பி., இளங்கோவன் (தி.மு..,), ஆதரவற்ற, எச்..வி., மற்றும் மனநலம் பாதிக்கப் பட்ட 300 குழந்தைகளுக்கு இலவச புத்தாடை மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி, வாழ்த்தி பேசினார்.விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவனத்தின் சுஜாதா சேகர், கோமளா சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.